மொனறாகலை மாவட்ட குடிநீர் பிரச்சினைகளுக்கு துரித தீர்வுகள் | தினகரன்


மொனறாகலை மாவட்ட குடிநீர் பிரச்சினைகளுக்கு துரித தீர்வுகள்

16 கிராமப்புற குடிநீர் திட்டங்கள்

நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சின் ஊடாக மொனறாகலை மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.  

இதன் கீழ், மொனறாகலை மாவட்டத்தில் 30 கிராமங்களுக்கு குடிநீர் இல்லாமல் பாதிக்கப்படும் மக்களுக்காக 16 கிராமப்புற நீர் வழங்கல் திட்டங்கள் தொடங்கப்பட்டு அவற்றில் 09 கிராமங்கள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.  

மேலும் 07 கிராமப்புற நீர் திட்டங்கள் விரைவில் பொதுமக்களுக்கு கையளிக்கப்படவுள்ளன. மொனறாகலை மாவட்டத்தில் பல ஆண்டுகளாக நிலவும் குடிநீர் பிரச்சினைகளுக்கு நீண்டகால மற்றும் குறுகிய கால தீர்வுகளை வழங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச இந்த விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் என்ற அடிப்படையில் நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சிற்கு அறிவுறுத்தினார்.  

அதன் அடிப்படையில் நிர்மாணிக்கப்படும் மொனறாகலை மாவட்டத்தின் மெதகம செயலக பிரிவில் உள்ள பெல்லன்ஓயா கிராம நீர் வழங்கல் திட்டம் நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் பொறியியலாளர் பிரியத் பந்துவிக்ரமவின் தலைமையின் கீழ் அண்மையில் திறக்கப்பட்டது.  

இந்த பெல்லன்ஓயா கிராமப்புற நீர் வழங்கல் திட்டம் பொல்கஹபிட்டிய மற்றும் ரத்தனதெனிய ஆகிய இரு கிராம சேவகப்பிரிவுகளில் வாழும் 875 குடும்பங்களுக்கு குழாய் நீர் வசதிகளை வழங்குகிறது.  

இச்செயற்றிட்டத்தின் கீழ் கழிவறை உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத 171 வீடுகளுக்கு இலவச கழிப்பறை வசதிகளை வழங்க இந்த திட்டம் கிட்டத்தட்ட ரூ.06 மில்லியன் செலவிட்டுள்ளது.


Add new comment

Or log in with...