உன்னிச்சை வைத்தியசாலையில் நிரந்தர டாக்டர் இல்லை | தினகரன்


உன்னிச்சை வைத்தியசாலையில் நிரந்தர டாக்டர் இல்லை

ஆளுநரிடம் முறைப்பாடு

உன்னிச்சை வைத்தியசாலைக்கு வருடக்கணக்காக  நிரந்தரமான டாக்டர் ஒருவர் நியமிக்கப்படவில்லையென ஆளுநரிடம் பிரதேச வாசிகள் முறையிட்டுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,...

உன்னிச்சை ஆஸ்பத்திரி மட்டக்களப்பு மாவட்டத்தில் அபிவிருத்தியடையாத பிரதேசத்தில் இருக்கிறது. வருடக்கணக்காக நிரந்தர டாக்டர் ஒருவர் அவ்வைத்தியசாலைக்கு நியமிக்கப்படவில்லையென கிழக்கு மாகாண ஆளுநர் கடந்த வாரம்  உன்னிச்சைக்கு விஜயம் செய்தபோது முறையிட்டனர்.

இது பற்றி மட்டக்களப்பு பிராந்திய சுகாதாரப் பணிப்பாளரிடம் நேற்று முன்தினம் வினவிய போது,

மகிழவட்டவான், உன்னிச்சை ஆகிய  வைத்தியசாலைகளுக்கு ஒரேயொரு டாக்டர் நியமிக்கப்பட்டிருக்கிறார். டாக்டர்கள் இல்லாததால்தான் இப்படி செய்கிறோம். சுகாதார அமைச்சு புதிதாக  டாக்டர்களை தருமாயின் உன்னிச்சைக்கு தனியான டாக்டரொருவர் நியமிக்கப்படுவார் என்றார்.

புளியந்தீவு குறூப் நிருபர்


Add new comment

Or log in with...