வாக்கு பெட்டிகள் வாக்களிப்பு நிலையங்களுக்கு | தினகரன்


வாக்கு பெட்டிகள் வாக்களிப்பு நிலையங்களுக்கு

வாக்கு பெட்டிகளை வாக்களிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகள் இன்று (04) காலை முதல் இடம்பெற்று வருகின்றது.

வாக்கு பெட்டிகள் 71 விநியோக வளாகங்களிலிருந்து வாக்களிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படும் என, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறித்த வாக்கு பெட்டிகளுடன் வாக்களிப்பு நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பாதுகாப்புக் கடமைகளுக்காக பொலிஸ் அதிகாரிகள் இருவர் வாக்களிப்பு நிலையங்களுக்கு புறப்பட்டுச் செல்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றிரவு (04) சிரேஷ்ட வாக்களிப்பு நிலைய பொறுப்பதிகாரிகள், வாக்களிப்பு நிலையங்களில் தங்கியிருப்பார்கள் என, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, வாக்களிப்பு நிலையங்களில் இன்று தொற்றுநீக்கம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...