'நாட்டில் மத நல்லிணக்கத்திற்கான சுற்றுச்சூழல் அமைக்கப்பட்டுள்ளது'

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தமிழ் அலைவரிசையான நேத்திரா ரி.வியில் ஒவ்வொரு மாதமும் நோன்மதி தினத்தன்று விசேட பௌத்த கலந்துரையாடல் தமிழ் மொழியில் ஒளிபரப்பாகி வருகிறது.அந்த வகையில் நேற்று நேத்திரா ரி.வியில் நோன்மதி தின சிறப்பு கலந்துரையாடல்கள் மூன்று இடம்பெற்றன.சமகால நிர்வாகத்தில் மதங்களுக்கான முக்கியத்துவம் சிறப்பாக பேணப்பட்டு வந்ததாகவும் மத நல்லிணக்கத்திற்கான அடித்தளம் இடப்பட்டதாகவும் இந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த ஜெயரஞ்சன் யோகராஜ் தெரிவித்தார். தமிழ் பேசும் மக்களுக்கு பௌத்த தர்மம் தொடர்பான விளக்கம் ஒன்றை வழங்கும் நோக்கிலேயே, இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் பல்வேறு மத நல்லிணக்க செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த மாற்றம் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு மிகுந்த ஆறுதலைத் தருகிறது. ஒரு மதம் பற்றி ஏனைய சமூகங்களுக்கு அந்த சமூகங்களின் மொழிகளில் இலகு நடையில் வழங்கும்போது நல்லிணக்கம் ஏற்படுகிறது.மேலும் மதங்கள் பற்றிய பல அநாவசிய சந்தேகங்களும் முரண்பாடுகளும் நீங்குகின்றன.

நோன்மதி தினத்தின் வரலாற்று சிறப்பு, பௌத்த தர்மம், பஞ்ச சீலம் தொடர்பான விளக்கம், தியானம் மற்றும் தானங்கள் பற்றிய விளக்கம், புத்த பகவானின் வாழ்கை சரித்திரம் உட்பட பல விடயங்கள் உள்ளடங்குகின்றன.இந்த நிகழ்ச்சியில் தமிழ் பேசும் பௌத்த பிக்கு மூலம் பௌத்த தர்மம் குறித்த விளக்கம் இலகு தமிழில் வழங்கப்படுகின்றமை சிறப்பம்சமாகும்.புத்தசாசன , கலாசார அலுவல்கள் மற்றும் மத விவகார அமைச்சின் ஊடக செயலாளரும் சிரேஷட ஊடகவியலாளருமான ஜெயரஞ்சன் யோகராஜ் அமைச்சின் சார்பில் கலந்துகொள்கின்றமை குறிப்பிடத்தக்கது. நேற்று நடந்த நிகழ்வில் சங்கைக்குரிய பொரல்லே கோவித தெரரும் திருநெல்வேலி போதி தர்மர் அரவணடிகளும் வழங்கினர்.

அத்துடன் இலங்கை தமிழ் பௌத்தன் சங்கத்தின் தலைவர் பத்மராஜா மற்றும் அதன் அங்கத்தவர் உதயகுமாரும் கலந்து, பஞ்ச சீலம் , தர்மம் போன்ற விடயங்கள் குறித்த விளக்கங்களை வழங்கினர்.இந்த நிகழ்ச்சியை தொகுத்தளித்தவர் சந்திரசேகர்.


Add new comment

Or log in with...