பிரதமருடனான பேச்சில் சாதகத்தன்மை; போராட்டத்தை கைவிட்ட துறைமுக தொழிற்சங்கம் | தினகரன்

பிரதமருடனான பேச்சில் சாதகத்தன்மை; போராட்டத்தை கைவிட்ட துறைமுக தொழிற்சங்கம்

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை எந்தவொரு வெளிநாட்டுக்கும் வழங்கக் கூடாதென கூறி துறைமுகத் தொழிற்சங்கங்கள் ஆரம்பித்த தொழிற்சங்க நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் அறிவித்தனர். 

பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கும் துறைமுக தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்றுக் காலை தங்காலை கால்டன் இல்லத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னரே போராட்டத்தை இடைநிறுத்த முடிவெடுக்கப்பட்டதாக தொழிற்சங்கப் பிரதிநிதிகள் ஊடகங்களுக்கு அறிவித்தனர். 

பிரதமருடனான பேச்சுவார்த்தை வெற்றிகரமாக அமைந்ததால் தொழிற்சங்க நடவடிக்கையை இடைநிறுத்த முடிவு செய்ததாகவும் தொழிற்சங்கப் பிரநிதிகள் தெரிவித்தனர். 

கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கோ அல்லது வேறு எந்தவொரு நாட்டுக்கோ வழங்கக் கூடாதென வலியுறுத்தி 23 துறைமுக தொழிற்சங்கங்கள் கடந்த புதன்கிழமை முதல் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்திருந்த பின்புலத்திலேயே நேற்று அந்நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டது.   

சுப்பிரமணியம் நிஷாந்தன்  


Add new comment

Or log in with...