தேர்தலை இட்டு போக்குவரத்து திணைக்கள சேவைகள் இடம்பெறாது

எதிர்வரும் 04ஆம், 05ஆம் திகதிகளில், நாரஹேன்பிட்டி போக்குவரத்து திணைக்களம், வழமையான சேவைகளுக்காக திறக்கப்படமாட்டாது என, அத்திணைக்களம் அறிவித்துள்ளது.    

இம்முறை பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நிலையமாக, நாரஹேன்பிட்டி போக்குவரத்து திணைக்களம் பயன்படுத்தப்படவுள்ளது.

வாக்களிப்பு நிலையத்தை இடையூறின்றி நடத்துவதற்கு வசதியாக, தேர்தல் தினத்திலும் அதற்கு முன்னைய நாளிலும், மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் வழமையான சேவைகள் இடம்பெறமாட்டாது என,  போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகம் சுமித் சீ.கே. அலஹகோன் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...