விராட் கோலி, தமன்னாவை கைது செய்யக் கோரி வழக்கு | தினகரன்

விராட் கோலி, தமன்னாவை கைது செய்யக் கோரி வழக்கு

விராட் கோலி, தமன்னாவை கைது செய்யக் கோரி வழக்கு-Virat Kohli-Tamannaah-Cricket Gambling

"இந்திய கிரிக்கெட் அணி தலைவர் விராட் கோலி, நடிகை தமன்னா ஆகியோரைக் கைது செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது இணைய சூதாட்ட விளம்பரங்களில் நடித்துள்ள இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி, நடிகை தமன்னா ஆகியோரைக் கைது செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக வழக்கறிஞர் சூரியபிரகாசம், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, இணைய சூதாட்டத்துக்குத் தடை விதிக்க வேண்டும். இணைய சூதாட்டம் தொடர்பான விளம்பரங்களில் நடித்த கோலி, தமன்னா போன்றோரைக் கைது செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு மீதான விசாரணை ஆகஸ்ட் 4-ம் திகதி நடைபெறவுள்ளது.


Add new comment

Or log in with...