ஜெர்மனியில் இருந்து 12,000 அமெரிக்க துருப்புகள் வாபஸ்

ஜெர்மனியில் உள்ள சுமார் 12,000 அமெரிக்கத் துருப்புகளையும் அங்கிருந்து வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகளை அமெரிக்கா மேற்கொண்டுள்ளது.  

ஐரோப்பாவில் அமெரிக்கத் துருப்புகளை வேறு இடத்தில் நிலைநிறுத்தும் ஒரு மூலோபாயத் திட்டமாக அமெரிக்கா இதனை வர்ணித்துள்ளது. இதன்படி சுமார் 6,400 துருப்புகள் அமெரிக்கா திரும்பவிருப்பதோடு ஏனையவை இத்தாலி மற்றும் பெல்ஜியம் போன்ற நேட்டோ நாடுகளில் நிலைநிறுத்தப்படவுள்ளன.  

பாதுகாப்புச் செலவு தொடர்பிலான நேட்டோவின் இலக்கை ஜெர்மனி பூர்த்தி செய்யத் தவறியதற்கான பதில் நடவடிக்கையாக இது மேற்கொள்ளப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனார்ட் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.  

எனினும் இதற்கு அமெரிக்க கொங்கிரஸ் அவையில் பரந்த அளவில் எதிர்ப்பு வெளியாகி இருப்பதோடு இது ரஷ்யாவின் பலத்தை அதிகரிக்கு என்று குறிப்பிட்டுள்ளது.  

இது தொடர்பில் ஜெர்மனி மூத்த அதிகாரிகளும் கவலை வெளியிட்டுள்ளனர்.  

“இனியும் நாம் அவர்களுக்காக உறிஞ்சுபவர்களாக இருக்க முடியாது” என்று கடந்த புதன்கிழமை வெள்ளை மாளிகையில் வைத்து இந்த முடிவை அறிவித்த டிரம்ப் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.  


Add new comment

Or log in with...