ஸ்மார்ட் கைபேசி விற்பனையில் சம்சுங்கை விஞ்சியது ஹுவாவி | தினகரன்


ஸ்மார்ட் கைபேசி விற்பனையில் சம்சுங்கை விஞ்சியது ஹுவாவி

கடந்த காலாண்டில் முதல் முறையாக ஸ்மார்ட் கைபேசி விற்பனையில் சம்சுங்கை பின்தள்ளி ஹுவாவி முதலிடத்தை பிடித்திருப்பதாக நேற்று வெளியான சுயாதீனமான சந்தைப்படுத்த ஆய்வு அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

கடந்த ஜூன் மாதம் முடிவுற்ற மூன்று மாதங்களில் சீன தொழில்நுட்ப நிறுவனமான ஹுவாவி 55.8 மில்லியன் கைபேசிகளை விற்றிருப்பதோடு, தனது நீண்டகால போட்டி நிறுவனமான சாம்சுங் இந்தக் காலப்பிரிவில் 53.7 மில்லியன் கைபேசிகளையே விற்றிருப்பதாக கனலைஸ் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  

“முதலிடத்தை பெற்றிருப்பது ஹுவாவிக்கு மிக முக்கியமான ஒன்றாக உள்ளது” என்று கனலைஸ் ஆய்வாளர் மோ ஜியா தெரிவித்துள்ளார். உள்ளூர் வாடிக்கையாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் மேம்பாட்டாளர்களுக்கு தமது வர்த்தகக் குறியீட்டின் வலிமையை வெளிப்படுத்த அது விரும்புகிறது” என்றும் அவர் குறிப்பிட்டார். கடந்த ஓர் ஆண்டுக்கு மேலாக ஹுவாவியின் சர்வதேச வர்த்தகத்தை பலவீனப்படுத்தும் வகையில் அமெரிக்காவின் அழுத்தங்கள் அதிகரித்துள்ள சூழலிலேயே அந்த நிறுவனம் இந்த மைல்கல்லை எட்டியுள்ளது.  

எனினும் கொவிட்–19 சூழலே ஹுவாவியின் முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவி இருப்பதாக சந்தைப்படுத்தல் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஹுவாவி நிறுவனத்தின் சுமார் 70 வீதமான ஸ்பார்ட் கைபேசிகள் தற்போது சீனாவில் விற்கப்படுகின்றன. அதன் வெளியூர் வர்த்தகம் சுமார் 33 வீதம் குறைந்துள்ளது. 

உலகச்சந்தை படிப்படியாக மீண்டுவரும்வேளையில், உள்ளூர் விற்பனையை மட்டுமே நம்பியிருந்தால், ஹுவாவி அதன் விற்பனையை நிலையாக வைத்திருப்பது சிரமம் என கனலைஸ் எச்சரித்துள்ளது.


Add new comment

Or log in with...