மியான்மார் எல்லை அருகே பயங்கரவாதிகள் தாக்குதல் | தினகரன்


மியான்மார் எல்லை அருகே பயங்கரவாதிகள் தாக்குதல்

மணிப்பூர் மியான்மர் எல்லை அருகே பயங்கரவாத குழுவினர் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.

மணிப்பூர் மாநிலம் சந்தல் மாவட்டத்தில் மியான்மர் எல்லையை அண்மித்த பகுதியில் அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவைச் சேர்ந்த வீரர்கள் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போது பயங்கரவாதிகள் புதைத்து வைத்திருந்த கண்ணிவெடியில் வீரர்களின் வாகனம் சிக்கியது.

இந்த திடீர் தாக்குதலால் நிலைகுலைந்த வீரர்கள் சுதாகரிப்பதற்குள், அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இந்த தாக்குதலில் 3 வீரர்கள் உயிரிழந்துள்ளதுடன், 4 பேர் பலத்த காயமடைந்தனர்.

இந்த தாக்குதலைத் தொடர்ந்து அப்பகுதிக்கு பாதுகாப்பு படையினர் விரைந்துள்ளனர். உள்ளூர் பயங்கரவாத குழுவான மக்கள் விடுதலை முன்னணி இந்த தாக்குதலை நடத்தியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...