மருத்துவ நிபுணர் குழுவுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை | தினகரன்

மருத்துவ நிபுணர் குழுவுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மருத்துவ நிபுணர்கள் குழுவினருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஆலோசனை நடத்தியுள்ளார்கள்.

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்ற குறித்த கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொளி காட்சி வாயிலாக பங்கேற்றார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மற்றும் அதனுடன் இணைந்த பகுதிகள் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை, தேனி உள்ளிட்ட சில மாவட்டங்களில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் நாளையுடன் நிறைவடையவுள்ளன.

தமிழகத்தில் கட்டுப்பாட்டை நீடிப்பது அல்லது தளர்வுகள் அளிப்பது குறித்து ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஆலோசனை வழங்க 19 மருத்துவர்கள் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. குறித்த குழு சிகிச்சை நெறிமுறைகளை வகுப்பதோடு, பல்வேறான பரிந்துரைகளையும் வழங்கி வருகிறது.


Add new comment

Or log in with...