24 மணி நேரத்தில் 52,123 பேருக்கு தொற்று இந்தியாவில் கொரோனா பாதிப்பு 16 இலட்சம் | தினகரன்


24 மணி நேரத்தில் 52,123 பேருக்கு தொற்று இந்தியாவில் கொரோனா பாதிப்பு 16 இலட்சம்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 52,123 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதுடன், 775 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பதாலும், பரிசோதனைகளை அதிகரிப்பதாலும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்கிறது.

அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.இந்நிலையில், நேற்றுக்காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனா பாதிப்பு 16 இலட்சத்தை நெருங்கி உள்ளது. மொத்தம் 15,83,792 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 52,123 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 775 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34,968 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 10 இலட்சத்தை தாண்டியது.

இதுவரை 10,20,582 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 5,28,242 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

 


Add new comment

Or log in with...