இலங்கை உள்ளிட்ட நாடுகளில் வசிப்போருக்கு குவைத் வர தடை | தினகரன்


இலங்கை உள்ளிட்ட நாடுகளில் வசிப்போருக்கு குவைத் வர தடை

இலங்கை, இந்தியா, ஈரான், பங்களாதேஷ், பாகிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு மறு அறிவித்தல் வரை தடை விதிக்கப்பட்டுள்ளதாக, குவைத் இன்று (29) அதிகாலை அறிவித்துள்ளது.

இதேவேளை இலங்கை, பங்களாதேஷ், பிலிப்பைன்ஸ், இந்தியா, பாகிஸ்தான், ஈரான், நேபாளம் ஆகிய நாடுகளை தவிர, குவைத் நாட்டவர்கள் மற்றும் அந்நாட்டில் வசிப்பவர்களுக்கு, குவைத்திலிருந்து வெளியேறவும் குவைத்திற்கு வருவதற்குமான அனுமதியை வழங்குவதற்கு அந்நாட்டு அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக, குவைத் அரசாங்க தொடர்பாடல் நிலையம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்திலிருந்து வர்த்தக விமான சேவைகளை பகுதியளவில் ஆரம்பிக்கவுள்ளதாக கடந்த மாதம் குவைத் அறிவித்திருந்தது. ஆயினும்,கொரோனா வைரஸ் தொற்று நிலையை அடுத்து,அந்நாட்டு விமான சேவைகள் வழமைக்குத் திரும்பும் நிலையில், மேலும் ஒரு வருட காலம் வரை, விமான நிலையத்தின் முழு செயற்பாட்டையும் வழமைக்கு கொண்டுவருவதை, எதிர்பார்க்க முடியாது எனவும் அறிவித்துள்ளது.


Add new comment

Or log in with...