இலங்கையர்களை அழைத்து வரும் நடவடிக்கை மீண்டும் ஆரம்பம் | தினகரன்


இலங்கையர்களை அழைத்து வரும் நடவடிக்கை மீண்டும் ஆரம்பம்

இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அலுவலகத்தின் வெளிவிவகாரங்களுக்கான மேலதிக செயலாளர் ஜயனாத் கொலம்பகே இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்நடவடிக்கை அண்மையில் இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில், அந்நடவடிக்கை நாளை மறுதினம் (31)மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய முதலாவது குழுவினர், துபாயிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...