பாடசாலை வேன்களுக்கு மேலும் 6 மாத கால லீசிங் சலுகை | தினகரன்


பாடசாலை வேன்களுக்கு மேலும் 6 மாத கால லீசிங் சலுகை

பாடசாலை வேன்களுக்கு மேலும் 6 மாத கால லீசிங் சலுகை-6 More Months Grace Period for School Van Leasing

மாவட்டங்களுக்கிடையிலான பாடசாலை மாணவர்கள் போக்குவரத்து சேவை சங்கத்தின் வேண்டுகோளை கவனத்தில் எடுத்துக்கொண்ட ஜனாதிபதி, பாடசாலை வேன்களுக்கு லீசிங் கடன் தவணை கொடுப்பனவுக்கு மேலும் 06 மாதகால சலுகைக்காலம் ஒன்றை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்தார்.

கொரோனா பரவல் நிலை காரணமாக, பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதனால், தமது சங்கத்தின் உறுப்பினர்களால் வாகன லீசிங் செலுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக, அச்சங்கத்தினர் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பொதுஜன பெரமுனவில் பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் வெற்றியை உறுதிசெய்யும் வகையில் இன்று (27) இரண்டாம் நாளாகவும் குருணாகல் மாவட்டத்திற்கு விஜயத்தை மேற்கொண்டு மாவத்தகம பொதுச் சந்தை வளாகத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்திருந்தார்.


Add new comment

Or log in with...