போதைப்பொருளையும் முற்றாக ஒழிப்பதாக ஜனாதிபதி உறுதி

யுத்தத்தை நிறைவு செய்ததை போன்று

போதைப்பொருள் அற்ற நாடொன்றை எதிர்கால சந்ததியினருக்கு வழங்குவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உறுதியளித்துள்ளார்.

பல்வேறு வழிகளில் போதைப் பொருளை நாட்டிற்குள் கொண்டு வருதல், மற்றும் விநியோகித்தலை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பயங்கரவாதத்திலிருந்து நாட்டை மீட்டெடுத்தது போல் போதைப்பொருளில் இருந்தும் நாட்டை மீட்டெடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவில் பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் வெற்றியை உறுதிசெய்யும் வகையில் கம்பஹா மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி கிரிபத்கொட பொது வணிக வளாகத்திற்கு முன்னால் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

வேட்பாளர் பிரசன்ன ரணவீர இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார். இம்மக்கள் சந்திப்பில் பங்குபற்றிய பேராசிரியர் சங்கைக்குரிய கும்புறுகமுவே வஜிர தேரர்  உள்ளிட்ட மகாசங்கத்தினர் ஜனாதிபதிக்கு ஆசி வழங்கினர்.

வெள்ளத்தினால் பாதிக்கப்படும் பேலியகொட பிரதேச மக்களுக்காக தொடர்மாடி வீட்டுத்திட்டம் மற்றும் பெத்தியாகொட உந்தி நிலையம் (Pumping Station) ஒன்றை நிர்மாணித்து தருமாறு மக்கள் முன்வைத்த வேண்டுகோளுக்கு ஜனாதிபதி அவர்கள் கவனம் செலுத்தினார். கிரிபத்கொட வைத்தியசாலையின் தற்போதைய நிலை மற்றும் காணிப் பிரச்சினை தொடர்பாகவும் பொதுமக்கள் ஜனாதிபதிக்கு தெளிவூட்டினர். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணையை நிறுத்த வேண்டாமென்றும் அவர்கள் ஜனாதிபதியிடம் கேட்டுக் கொண்டனர்.

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, வேட்பாளர் சிசிர ஜயகொடி ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். முறையான பராமறிப்பின்மை காரணமாக சேதமடைந்துள்ள சியம்பலாபே சந்தி அருகில் உள்ள உடற்பயிற்சி நடைபாதை தொடர்பாகவும் கவனம் செலுத்தி, அதனை உடனடியாக புனர்நிர்மாணம் செய்து, தியத்த உயன செயற்திட்டத்திற்கு இணையான சுயதொழில் மத்திய நிலையமாக அபிவிருத்தி செய்யுமாறு மக்கள் ஜனாதிபதியை கேட்டுக்கொண்டனர்.

 


Add new comment

Or log in with...