மலையகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதே குறிக்கோள்

முத்தையா பிரபு கொள்கை பிரகடனம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான புதிய ஆட்சியின் கீழ் மலையகத்தில் நிச்சயமாக மாற்றத்தை ஏற்படுத்துவோம் என பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் முத்தையா பிரபு தெரிவித்தார். 

லிந்துலை பெயார்வெல் தோட்டத்தில் நேற்று  நடைபெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார். 

 மேலும் கருத்து தெரிவித்த அவர்,  ஜனாதிபதிக்கு நாம் ஒத்துழைப்பு வழங்கவேண்டும். அவரின் அபிவிருத்தி செயற்றிட்டங்களை எமது பகுதிகளிலும் நடைமுறைப்படுத்த வேண்டும். அபிவிருத்தி என்பது வார்த்தையில் மட்டுமல்ல செயலிலும் இருக்க வேண்டும் என்ற நோக்கிலே நான் அரசியலில் குதித்துள்ளேன். 

தேர்தல் காலங்களில் வாக்குறுதிகளை வழங்கிவிட்டு பலரும் ஏமாற்றுவார்கள். ஆனால், செய்து காட்டுவதற்காகவே நாம் அரசியலுக்கு வந்துள்ளோம். 

சுதந்திரம் கிடைத்து 72 வருடங்கள் கடந்தும் தமிழ் அரசியல் வாதிகளால் நுவரெலியாவில் ஒரு  தமிழ் தேசிய பாடசாலையை உருவாக்க முடியாத நிலை ஏற்பட்டது. 

வருமானம் இன்மையே எமது மக்கள் எதிர்நோக்கும் பிரதான பிரச்சினையாகும். அந்த வருமானத்தை அதிகரித்துக் கொள்வதற்கான வழிமுறைகள் இங்கு இல்லை. அதற்கான திட்டங்களையும் அரசியல்வாதிகள் கொண்டுவரவில்லை. நுவரெலியா மாவட்டத்தில் தொழிற்சாலைகள் இருந்தால் வெளி மாவட்டங்களுக்கு வேலைக்கு செல்லவேண்டியதில்லை.

அவ்வாறான தொழிற்சாலைகளை கொண்டுவருவதற்கும் கடந்த காலங்களில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இவ்வாறான திட்டங்களையே நாம் கொண்டுவரவுள்ளோம். 

அந்த மாற்றத்தை ஏற்படுத்துவதற்காகவே நான் வந்துள்ளேன். எனக்கும் வாய்ப்பு தந்து பாருங்கள், நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்துவேன் என்றார்.


Add new comment

Or log in with...