சமூகத்தை காட்டிக் கொடுத்து அரசியல் செய்வதை கைவிடுங்கள்

முஸ்லிம் தலைமைகளிடம் மர்ஜான் கோரிக்கை

முஸ்லிம் சமூகத்தை காட்டிக்ெகாடுத்து அரசியல் பிழைப்பு நடத்தும் செயற்பாடுகளை எமது சமூக அரசியல்வாதிகள் கைவிட வேண்டுமென பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய பட்டியல் வேட்பாளர் மர்ஜான் பளீல் தெரிவித்தார்.  

பொதுஜன பெரமுனவின் வெற்றியை உறுதிப்படுத்தும் நோக்கில் பேருவளை மருதானை, சீனன்கோட்டை பிரதேச முஸ்லிம் பகுதிகளில் நடைபெற்ற பிர சார கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

தொடர்ந்து உரையாற்றிய அவர், சமூகத்தை காட்டிக் கொடுத்து அரசியல் பிழைப்பு நடாத்தும் பேருவளை தொகுதி அரசியல்வாதிகளுக்கு நடைபெறவுள்ள தேர்தலில் எமது சமூகம் சிறந்த பாடத்தை புகட்ட வேண்டும்.

இவர்களின் செயற்பாடுகளாலே முஸ்லிம் சமூகத்திற்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது.  

அன்று தர்கா நகர் சம்பவத்தைக்ெகாண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை வீட்டிற்கு அனுப்பினார்களோ அதே பேருவளை தொகுதி மக்கள் இம்முறை ரணில்,சஜித் தரப்பினருக்கு சிறந்த பாடத்தை புகட்ட முன்வந்துள்ளதை பாராட்டுகிறேன்.தர்கா நகர் மக்களின் செயற்பாடுகளில் முன்னேற்றங்கள் காணப்படுவதை பாராட்டுகிறேன். பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் இனவாதம் இல்லை என்பதை அவர்கள் விளங்கி கொண்டுள்ளனர்.

உண்மையான இனவாதிகள் யார் என்பதையும் அவர்கள் இன்று தெரிந்து வைத்துள்ளனர்.  

 களுத்துறைமாவட்டமுஸ்லிம்கள்நடைபெறவுள்ளதேர்தலில்ஜனாதிபதிகோட்டாபயராஜபக்சதலைமையிலானஅரசைஅதிகப்படியானவாக்குகளினால்வெற்றிபெறச்செய்துமுழுஇலங்கைக்கும்முன்மாதிரியானசெய்தியைவழங்குவார்கள். 


There is 1 Comment

Add new comment

Or log in with...