சமூகத்தை காட்டிக் கொடுத்து அரசியல் செய்வதை கைவிடுங்கள் | தினகரன்

சமூகத்தை காட்டிக் கொடுத்து அரசியல் செய்வதை கைவிடுங்கள்

முஸ்லிம் தலைமைகளிடம் மர்ஜான் கோரிக்கை

முஸ்லிம் சமூகத்தை காட்டிக்ெகாடுத்து அரசியல் பிழைப்பு நடத்தும் செயற்பாடுகளை எமது சமூக அரசியல்வாதிகள் கைவிட வேண்டுமென பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய பட்டியல் வேட்பாளர் மர்ஜான் பளீல் தெரிவித்தார்.  

பொதுஜன பெரமுனவின் வெற்றியை உறுதிப்படுத்தும் நோக்கில் பேருவளை மருதானை, சீனன்கோட்டை பிரதேச முஸ்லிம் பகுதிகளில் நடைபெற்ற பிர சார கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

தொடர்ந்து உரையாற்றிய அவர், சமூகத்தை காட்டிக் கொடுத்து அரசியல் பிழைப்பு நடாத்தும் பேருவளை தொகுதி அரசியல்வாதிகளுக்கு நடைபெறவுள்ள தேர்தலில் எமது சமூகம் சிறந்த பாடத்தை புகட்ட வேண்டும்.

இவர்களின் செயற்பாடுகளாலே முஸ்லிம் சமூகத்திற்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது.  

அன்று தர்கா நகர் சம்பவத்தைக்ெகாண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை வீட்டிற்கு அனுப்பினார்களோ அதே பேருவளை தொகுதி மக்கள் இம்முறை ரணில்,சஜித் தரப்பினருக்கு சிறந்த பாடத்தை புகட்ட முன்வந்துள்ளதை பாராட்டுகிறேன்.தர்கா நகர் மக்களின் செயற்பாடுகளில் முன்னேற்றங்கள் காணப்படுவதை பாராட்டுகிறேன். பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் இனவாதம் இல்லை என்பதை அவர்கள் விளங்கி கொண்டுள்ளனர்.

உண்மையான இனவாதிகள் யார் என்பதையும் அவர்கள் இன்று தெரிந்து வைத்துள்ளனர்.  

 களுத்துறைமாவட்டமுஸ்லிம்கள்நடைபெறவுள்ளதேர்தலில்ஜனாதிபதிகோட்டாபயராஜபக்சதலைமையிலானஅரசைஅதிகப்படியானவாக்குகளினால்வெற்றிபெறச்செய்துமுழுஇலங்கைக்கும்முன்மாதிரியானசெய்தியைவழங்குவார்கள். 


There is 1 Comment

எஸ்.எல்.பி.பி வேட்பாளர் ஏ.எல்.எம்.பாரிஸ் ஹாஜியாரை ஆகஸ்ட் 5, 2020 அன்று எஸ்.எல்.பி.பி / மஹிந்தா / கோட்டாபயா புதிய அரசாங்கத்தின் புதிய முஸ்லீம் எம்.பி.யாக கண்டி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்த ஃபாரிஸ் ஹஜியாராய் ஒருமனதாக வாக்களிக்க வேண்டும், இன்ஷா அல்லாஹ். முஸ்லிம்கள் அரசியல் ரீதியாக தாங்களாகவே செயல்படத் தொடங்கியுள்ளனர், மேலும் கோதபயாவை ஆதரிக்கத் தொடங்கியுள்ளனர். கோட்டாபயா, மஹிந்த வின் வெற்றியை வெற்றிபெறச் செய்வதற்கான திறனுக்குள் முடிந்த அனைத்தையும் கண்டி முஸ்லிம்கள் செய்ய வேண்டும், இன்ஷா அல்லாஹ். முஸ்லிம் வாக்கு வங்கியின் ஒரு பகுதியினய முசம்மில் ஹஜியார், ஜுஹைர் ஹஜியார், என்.எம்.அமீன் போன்ற முஸ்லிம் சமூகத் தலைவர்கள் தலைமையில், SLMC, ஏ.சி.எம்.சி மற்றும் என்.யு.ஏ தலைவர்களின் கைக்கூலிகளால் நடத்தப்பட்ட செய்தி வெளியீடுகள் மற்றும் ஊடக நாடகங்களால் அவர்கள் 2010, 2015 இல் முஸ்லீம்கள் ஏமாற்றப்பட்டனர். முஸ்லீம்கள் ஏமாற்றப்படுவதற்கு இனி தயாராக இல்லை. ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவுக்கு 2019 -இல் வாக்களித்த 300,000 க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் பாராளுமன்றங்களுக்கான எம்.பி.யின் தேசிய பட்டியல் நியமனங்களில் களுத்துறை முஸ்லிம்கள் மற்றும் கண்டி மாவட்ட வாக்காளர்களின் வாக்குகளாளும் க்மற்றும் கோதபய ராஜபக்ச ஆகியோரின் உதவியால் ஜனாதிபதி சட்டத்தரணி அலிசப்ரி, மர்ஜன் ஹஜியார் அந்த வாய்ப்பைப் பெற முடியும். அது நடக்கும்படி முஸ்லிம்களான நாம் துவாவைக் கேட்க வேண்டும், இன்ஷா அல்லாஹ். கடந்த ஜனாதிபதித் தேர்தல்களில் ஏற்கனவே "பொட்டுவா" க்கு வாக்களித்த 300,000 முஸ்லீம்கள், இந்த முறை கிட்டத்தட்ட 650,00 முஸ்லீம்கள் SLPP க்கு வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம், இன்ஷா அல்லாஹ். Noor Nizam - Convener "The Muslim Voice".

Add new comment

Or log in with...