மண்டைதீவில் 111 கி.கி. கஞ்சாவுடன் இருவர் கைது

- ஜூலை 30 வரை விளக்கமறியல்

யாழ். மண்டைதீவில் 111 கிலோ 755 கிராம் கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களை, எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இச்சந்தேகநபர்கள் நேற்று (16) ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே, இவ்விளக்கமறியல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

நேற்று (16) காலை, மண்டைதீவு கடல் வழியாக படகில் கேரள கஞ்சா கொண்டு வரப்படுவதாக கிடைத்த தகவலுக்கு அமைய, மண்டைதீவு கடற்படையினர் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.

இதன்போது, குறித்த படகில் கேரள கஞ்சாவைக் கொண்டு வந்த குற்றச்சாட்டில் இருவர் கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாணம் விசேட அதிரடிப்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இச்சந்தேகநபர்கள், விசேட அதிரடிப்படையினரால், ஊர்காவற்றுறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 27, 31 வயதுடைய சந்தேகநபர்கள் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாகவும், பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 

 


Add new comment

Or log in with...