அமெரிக்காவுக்கு தகவல்களை விற்றவருக்கு ஈரானில் தூக்கு | தினகரன்


அமெரிக்காவுக்கு தகவல்களை விற்றவருக்கு ஈரானில் தூக்கு

அமெரிக்காவுக்கு தகவல்களை விற்ற குற்றச்சாட்டில் ஈரான் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் ஊழியர் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ரேசா அஸ்கரி என்பவர் மீதான மரண தண்டனை கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டதாக நீதித்துறை செய்தித் தொடர்பாளர் கொலம்ஹொசைன் இஸ்மைலி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.  

2016 ஆம் ஆண்டில் பாதுகாப்பு அமைச்சின் வான்வெளிப் பிரிவில் இருந்து ஒய்வு பெற்ற அஸ்கரி ஈரானின் ஏவுகணை திட்டம் பற்றிய விபரங்களை அமெரிக்க மத்திய உளவுப் பிரிவுக்கு வழங்கி இருப்பதாக இஸ்மைலி தெரிவித்தார். எனினும் அஸ்காரி எப்போது கைது செய்யப்பட்டார், அவர் மீதான வழக்கு விசாரணை பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை. 


Add new comment

Or log in with...