இலங்கையில் இதுவரை 130,000 PCR சோதனகள் | தினகரன்


இலங்கையில் இதுவரை 130,000 PCR சோதனகள்

இலங்கையில் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளான நோயாளர்களை அடையாளம் காணும் வகையில், இதுவரையில் சுமார் 130,000 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் தகவல்களுக்கு அமைய, இதுவரையில் 130,390 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள அதேவேளை, நேற்று (15) மாத்திரம் 2,470 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, அவர் மேலும் தெரிவித்தார்.

தனிமைப்படுத்தல் நிலையங்கள், வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இவ்வாறு PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை நேற்று முன்தினம் 2288 PCR பரிசோதனைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...