பாஜகவில் எந்த ஒரு சூழ்நிலையிலும் இணையமாட்டேன் | தினகரன்


பாஜகவில் எந்த ஒரு சூழ்நிலையிலும் இணையமாட்டேன்

நான் எந்த ஒரு சூழ்நிலையிலும் பாஜகவில் இணையமாட்டேன் என்று ராஜஸ்தான் மாநில முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் கூறியுள்ளார்.  

காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் ராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட்டுக்கும் துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட்டுக்கும் இடையே தொடக்கத்தில் இருந்தே மோதல் போக்கு நிலவி வந்த நிலையில், ராஜஸ்தான் மாநில துணை முதல்வர்  பதவியில் இருந்தும் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்தும் சச்சின் பைலட் செவ்வாய்க்கிழமை நீக்கப்பட்டார். அவருடன் அவரது ஆதரவாளர்களான விஸ்வேந்திர சிங், ரமேஷ் மீனா ஆகிய இருவரும் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டனர்.

காங்கிரஸ் தலைமையின் இந்த அதிரடி நடவடிக்கை ராஜஸ்தானில் மட்டுமின்றி தேசிய அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில், நான் எந்த ஒரு சூழ்நிலையிலும் பாஜகவில் இணையமாட்டேன். டில்லியில் தலைமை பதவிகளில் உள்ளோரின் மனதில் நஞ்சை கலக்க சிலர் நான் பாஜகவில் இணைய இருப்பதாக கூறிவருகிறார்கள். அசோக் கெலாட் மீது எனக்கு கோபம் இல்லை. ஆனால் அவர் முன்னாள் முதல்வர் வசுந்திரா செயல்பட்டதை போன்று செயல்படுகிறார். நான் கண்ணியத்துடன் நடத்தப்படவில்லை. வேலை செய்ய இடமளிக்கவில்லை என்று சச்சின் பைலட் கூறியுள்ளார்.


Add new comment

Or log in with...