கொவிட்-19: லத்தீன் அமெரிக்காவில் உலகில் இரண்டாவது அதிக பாதிப்பு | தினகரன்


கொவிட்-19: லத்தீன் அமெரிக்காவில் உலகில் இரண்டாவது அதிக பாதிப்பு

லத்தீன் அமெரிக்கா உலகில் கொரோனா வைரஸ் தொற்றால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் இரண்டாவது இடத்தை எட்டியுள்ளது. அங்கு, 144,758 மரணங்கள் நேர்ந்துள்ளன. அவற்றுள் கிட்டத்தட்ட பாதி, பிரேசிலில் நேர்ந்ததாக ஏ.எப்.பி செய்தி நிறுவனம் தெரிவித்தது. உலக அளவில் வைரஸ் தொற்றல் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளான, மெக்சிகோ, பெரு, சிலி ஆகியவை லத்தீன் அமெரிக்க வட்டாரத்தில் உள்ளன.

அந்த வட்டாரத்தில் மொத்தம், 3.37 மில்லியனுக்கும் மேற்பட்டவர்களுக்குக் வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. உலகில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட ஐரோப்பிய வட்டாரத்தில் 202,505 பேர் உயிரிழந்தனர்.

பிரேசிலுக்கு அடுத்து, அமெரிக்காவையும் கனடாவையும் உள்ளடக்கிய வட்டாரத்தில், 144,023 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகெங்கும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 13 மில்லியனைத் தாண்டியுள்ளதோடு அரை மில்லியனுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் லத்தீன் அமெரிக்காவில் நோய்த் தொற்று வேகமாக பரவி வருவதை தரவுகள் காட்டுகின்றன.


Add new comment

Or log in with...