கதிர்காமம் பாதயாத்திரைக்கு தடை விதிக்கப்பட்டாலும் கந்தன் அருளாசி பக்தர்களுக்கு என்றும் கிட்டுவது உறுதி

இலங்கை வாழ் கதிர்காமம் புனித யாத்திரை பக்தர்களுக்கு நாம் அன்புடன் அறியத் தரும் விடயம் இதுவாகும். 

கடந்த பல்லாண்டு காலம் முருக பக்த அடியார்கள் ஏராளமானோர் வருடா வருடம் கதிர்காமம் முருகக் கடவுள் தரிசனத்தை கைவிடாமல் தொடர்கின்றனர். தங்கள் பக்தி பரவசத்தாலும் நேர்த்திக் கடன்களையும் ஆலய தரிசனத்துக்காகவும் நான்கு திசைகளிலும் இருந்து முருக தொண்டர்கள், நடை யாத்திரிகர்கள் என்பவர்கள் அங்கு செல்வதுண்டு. 

 தமது கிளை ஸ்தாபனங்களாக விளங்கும் தலவாக்க​ைல. கொட்டக்க​ைல சாமிமலை, குயின்ஸ்டவுன், மல்லிகைப்பூ வட்டாரம், மஸ்கெலியா, நுவரெலியா ஆகிய இடங்களில் பக்த அடியார் கூட்டம் இணைக்கப்பட்டு வடக்கு, கிழக்கு கதிர்காம நடைபாதையில் செல்வதுவழக்கம்.   அடியார்கள் கூட்டங்களையும் அன்புடன் அரவணைத்து நமது  

கதிர்காம கந்தவேல் வேல்நடை பாத யாத்திரை சங்கம் அழைத்துச் செல்வது வழக்கம்.   நாம் வழிகாட்டியாக கதிர்காமம் செல்வது வழமையாகும். இந்த யாத்திரையில் வடக்கு, கிழக்கிலிருந்து வரும் கதிர்காம கந்தவேல் வேல் நடைபவனி யாத்திரிகர்கள் கணக்கில் அடங்காது பக்தியுடன் யாத்திரை செல்வர்.  

இதில் அகில இலங்கை யாத்திரிகர்கள் வேல் ஆட்டம், காவடி ஆட்டம் ஆடிச் செல்வர். பக்தி பரவசத்தால் நிலை கொண்டு ஆடும் நடனங்களும் நடைபெற்று அரோகரா என்ற தாள அமைப்போடு ஆனந்தம் கொண்டாடி வருவார்கள்.  

கொடியேற்றம் பால்குடி பாவா சுவாமியின் திருவிழாவாக நடைபெறும். அங்கே விசேடமாக பாவாமார்களின் அற்புதங்களும் நடைபெறும் காட்சியை காண அளவிற்கு அதிகமான முஸ்லிம் சகோதரர்கள், குழந்தைகள், தாய்மார்கள் சகலரும் நறுமணம் கமழும் பன்னீர்களைத் தெளித்து ஆசீர் செய்வார்கள்.  

இவ்விழா முடிவடையும் பட்சத்தில் கந்தப் பெருமானின் திருவிழா ஆரம்பமாகும்.  

கடந்த 35 ஆண்டுகட்கு மேலாக கதிர்காமக் கந்தனின் உற்சவத்தையும் அலங்காரத்தையும் முருக பூசையின் சிறப்பையும் கண்டு ஆனந்தம் அடைந்து பக்தர்கள் தங்கள் பத்தியையும் வெளிப்படுத்தி மகிழ்வார்கள்.  

இந்த நிலையில் தீர்த்தம் அன்று பாவவிமோசன நீர் ஆடி முருக ஆசீர்வாதத்தோடு அரோகரா நாமம் கூறி மகிழ்வார்கள். அன்னதானம் செய்பவர்களும் தானத்தை அன்புடன் பெறுபவர்களும் ஆனந்தம் அடைந்து தங்கள் தங்கள் இல்லம் புறப்படும் வேளையில் தங்கள் இல்ல பூசை அறையில் வைத்து வணக்கம் செய்வதற்குரிய பொருட்களையும் வாங்கி செல்வர்.  

அகில இலங்கை கதிர்காம கந்தவேல் வேல்நடைபாதை சங்கத் தலைவர் கொழும்பு பாதுகாப்பு தலைமையகத்தின் ஊடாக கடந்த 37 வருடங்களுக்கு மேலாக அனுமதியுடன் இந்த நடைபாதையை ஒழுங்குமுறையுடன் நம்பிக்கையுடனும் பொறுப்புணர்வோடும் நடத்தி வந்துள்ளார்.  

ஆனால் இம்முறை 2020 ஆம் ஆண்டு நடையாத்திரைக்கு பாதுகாப்பு தலைமையகத்தால் நடை யாத்திரை போகக் கூடாது என்ற தடை ஏற்பட்டுள்ளது.அந்தத் தடை தவிர்க்க முடியாததாகும். கொரோனா அச்சுறுத்தல் காரணமாகவே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பாத யாத்திரை செய்யும் கூட்டத்தார்க்கு இது கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும் கொரோனா அச்சுறுத்தல் வேளையில் நாம் இத்தடையை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.  

எனினும் கந்தப் பெருமானின் ஆசி எமது அடியார்களுக்கு என்றும் கிடைக்கும் என்பதில் எமக்கு சந்தேகமில்லை. 

சுபமங்கம் உண்டாகட்டும். 

எஸ்.எஸ். கோகி ஸ்ரீசிவசந்திரி சுவாமி... 
(அகில இலங்கை கதிர்காம வேல் பாதயாத்திரை
சங்கத் தலைவர்)  


Add new comment

Or log in with...