மீனாட்சியம்மன் கோயிலில் 80 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் திறக்கப்பட்ட நுழைவுவாயில் | தினகரன்


மீனாட்சியம்மன் கோயிலில் 80 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் திறக்கப்பட்ட நுழைவுவாயில்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இருக்கும் மிக முக்கியமான நுழைவுவாயில் ஒன்று நேற்று திறக்கப்பட்டது. இது மதுரையில் மிக முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உலகம் முழுக்க பிரபலம் ஆகும். தினமும் ஆயிரக்கணக்கில் இங்கு மக்கள் வந்து செல்வது வழக்கம். ஆனால் தற்போது ​ெலாக்டவுன் காரணமாக மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு மக்களால் செல்ல முடியவில்லை. கோயில் பணியாளர்கள், அர்ச்சகர்கள் மட்டுமே தினமும் கோவிலுக்கு சென்று வருகிறார்கள்.

இந்த நிலையில் மீனாட்சி அம்மன் கோயிலில் இருக்கும் மிக முக்கியமான நுழைவுவாயில் ஒன்று நேற்று திறக்கப்பட்டது. இந்த வாயில் மீனாட்சி அம்மன் கோயிலின் மேற்கு கோபுர நுழைவுவாயிலுக்கு அருகே இருக்கிறது. இதற்கு உள்ளே சென்று 15-20 மீற்றர் நடந்து சென்றால் இந்த நுழைவுவாயிலை அடைய முடியும்.

ஆனால் இந்த நுழைவுவாயில் இத்தனை நாட்களாக மூடப்பட்டு இருந்தது. இத்தனை நாட்கள் என்றால் மொத்தமாக கடந்த 80 வருடமாக இந்த வாயில் திறக்கப்படவே இல்லை. மக்கள் கூட்டம் தொடங்கி பல்வேறு காரணங்களுக்காக இந்த வாயில் திறக்கப்படாமல் இருந்தது. தற்போது 80 வருடம் கழித்து இதை திறந்துள்ளனர்.

சரியான பூசை மற்றும் சுத்தப்படுத்தும் பணிகளை செய்து இந்த வாயிலை திறந்தனர். இந்த வாயில் மூலம் மிக எளிதாக, நேரடியாக கோவிலுக்கு உள்ளே சென்று சுவாமி தரிசனம் செய்ய முடியும்.  இத்தனை வருடம் மக்கள் பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்காமல் பூட்டிய வாயில் திறக்கப்பட்டுள்ளது.

இது மக்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. ஆனால் ​ெலாக்டவுன் காரணமாக மக்கள் இதை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதை இப்போது திறக்க என்ன காரணம் என்று தெரியவில்லை.


Add new comment

Or log in with...