இதுவரை 899 கடற்படையினர் குணமடைவு | தினகரன்

இதுவரை 899 கடற்படையினர் குணமடைவு

- மேலும் 07 கடற்படையினர் மாத்திரம் சிகிச்சையில்

கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்ட கடற்படையினரின் எண்ணிக்கை 899ஆக உயர்வடைந்துள்ளதாக, கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று (14), மேலுமொரு கடற்படை உறுப்பினர் குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளார்.

இதற்கமைய, கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 07 கடற்படையினர் மாத்திரம் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொவிட்-19 தொற்றுக் காரணமாக வைத்தியசாலைகளில் மொத்தமாக 906 கடற்படையினர் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இவ்வாறு கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு கடற்படையினர் குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ள போதிலும், சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய மேலும் 14 நாட்களுக்கு அவர்களை தனிமைப்படுத்த கடற்படையினரால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.


Add new comment

Or log in with...