24ஆவது கடற்படைத் தளபதியாக நிஷாந்த உலுகேதென்ன நியமனம் | தினகரன்

24ஆவது கடற்படைத் தளபதியாக நிஷாந்த உலுகேதென்ன நியமனம்

24ஆவது கடற்படைத் தளபதியாக நிஷாந்த உலுகேதென்ன நியமனம்-Vice Admiral Nishantha Ulugetenna Appointed as 24th Navy Commander

இலங்கை கடற்படையின் 24ஆவது தளபதியாக வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார்.

இன்று (15) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியிடமிருந்து, புதிய கடற்படைத்தளபதி  தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டார்.

கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவரான இவர் 1985ஆம் ஆண்டில் கடற்படை கெடேட் அதிகாரியாக இணைந்த நிஷாந்த உலுகேதென்ன, 1987இல் பிரதி லெப்டினெனாக நியமிக்கப்பட்டதோடு, 2015 இல் ரியர் அட்மிரலாக பதவி உயர்வு பெற்றார்.

24ஆவது கடற்படைத் தளபதியாக நிஷாந்த உலுக்தென்ன நியமனம்-Vice Admiral Nishantha Ulugetenna Appointed as 24th Navy Commander

கடற்படைத் தளபதியாக நியமிக்கப்படுவதற்கு முன்னர், நிஷாந்த உலுகேதென்ன கடற்படையின் பிரதானியாக பணியாற்றியிருந்தார். அவர் கடற்படையின் பிரதி பிரதானியாகவும், மேற்கு கடற்படை பிரிவின் கட்டளைத் தளபதியாகவும் பணியாற்றியுள்ளார்.

வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, வீர விக்ரம, ரணசூர, விஷிஷ்ட சேவா விபூஷண, சிறந்த சேவை ஆகியவற்றிற்கான பல பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதேவேளை, 23ஆவது கடற்படைத் தளபதியாக கடமையாற்றிய அட்மிரல் பியல் டி சில்வா, இன்றுடன் ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...