2021 - 2030 காலத்தை திறன் அபிவிருத்தி தசாப்தமாக ஜனாதிபதி அறிவிப்பு | தினகரன்


2021 - 2030 காலத்தை திறன் அபிவிருத்தி தசாப்தமாக ஜனாதிபதி அறிவிப்பு

2021 - 2030 காலத்தை திறன் அபிவிருத்தி தசாப்தமாக ஜனாதிபதி அறிவிப்பு-President Declares 2021-2030 the Decade of Skills Development

அனைத்து பிள்ளைகளுக்கும் உயர்கல்வி; பயிற்சியற்ற மனித வளத்தை 10%  வீதமாக குறைப்பதே நோக்கம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ  2021 - 2030 பத்து வருடங்களை இலங்கையின் திறன் அபிவிருத்தி தசாப்தமாக அறிவித்துள்ளார் “நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு” அரசாங்கத்தின் தேசிய கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக கல்வி மறுசீரமைப்பு மற்றும் திறன் அபிவிருத்தித்துறையில் சிறந்த பெறுபேற்றை இதன்மூலம் அடைந்துகொள்வதே இதன் நோக்கமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் 2014 ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத் தொடரில் முன்வைத்த முன்மொழிவின் மூலம் ஸ்தாபிக்கப்பட்ட “உலக இளைஞர் திறன் விருத்தி தினம்” பெற்றுக்கொண்ட பெறுபேற்றின் அடிப்படையில் திறன் அபிவிருத்தி தசாப்தம் திட்டமிடப்பட்டுள்ளது.

பூகோள மயமாக்கலுக்கு ஏற்றாற்போல் அடுத்த தலைமுறையின் திறன் அபிவிருத்தி மற்றும் பேண்தகு அபிவிருத்திக்காக பூகோள செயற்திட்டம் 2030 ஐ மையப்படுத்தி திறன் அபிவிருத்தி தசாப்தத்தின் செயற்பாட்டுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் பயிற்சி பெறாத தொழிற்படையை மொத்த சனத்தொகையில் 10% வீதமாக குறைத்தல் மற்றும் நாட்டின் அபிவிருத்தி செயற்திட்டத்தை முன்னெடுப்பதற்கு முடியுமான டிஜிட்டல் தொழிநுட்பத்தில் தேர்ச்சி பெற்ற மற்றும் எதிர்கால தேவைகளுக்கு பொருத்தமான தலைமுறையை உருவாக்குவதன் மூலம் இலங்கையை ஆசியாவின் மனிதவள அபிவிருத்தியின் மையமாக உருவாக்குவதற்கு சாதாரண கல்வி, மூன்றாம் நிலை கல்வி மற்றும் தொழிற்கல்வியை உருவாக்குவது திறன் அபிவிருத்தி தசாப்தத்தின் மூலம் எதிர்பார்க்கப்படுபவைகளாகும்.

கல்வித்துறையில் உருவாக்கப்படும் மாற்றத்தின் மூலம் வெளிநாட்டு முதலீடுகளுடன் வெளிநாட்டு மாணவர்களை கவருவதும் வெளிநாட்டு தொழில்களில் ஈடுபட்டுள்ள பயிற்சிபெற்ற தொழிலாளர்கள் உழைக்கும் அந்நியச்செலாவணியை அதிகப்படுத்துவதன் மூலம் மேலதிக வருமானத்தை பெற்றுக்கொள்வதே இதன் இன்னுமொரு எதிர்பார்ப்பாகும்.

“நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு” தேசிய கொள்கை இலங்கையின் எதிர்கால முன்னேற்றத்திற்கு நாட்டு மக்களின் அறிவு, திறன் மற்றும் திறமை என்பன மிக முக்கிய காரணிகளாக அமையும். “எங்கள் இளைஞர்களுக்கு மற்றும் உள்நாட்டு தொழில் முயற்சியாளர்களுக்கு புதிய சந்தர்ப்பங்களை உருவாக்குவதுடன், அனைவருக்கும் புதிய எதிர்பார்ப்புகளுடன் பெருமைபற்றிய உணர்வை ஏற்படுத்துகின்ற, மக்கள் தாம் தெரிவு செய்யும் எத்துறையிலும் உலகத் தலைவர்களாக உருவாவதற்கு முடியுமான வகையில் சுய திறன்விருத்தி வெற்றி வாய்ப்புகள் மற்றும் வணிக அறிவை பயன்படுத்துவதற்கு இடமளிக்கக்கூடிய சூழலை உருவாக்குவதற்காக” திட்டமிட்ட கல்வி பொறிமுறையொன்றை உருவாக்கி நடைமுறைப்படுத்தும் அவசியமும் இதன்மூலம் தெளிவுபடுத்தப்பட்டது.

தற்போதைய கல்வி முறையை மறுசீரமைத்து தேசிய கொள்கைப் பிரகடனத்தின் அடிப்படையில் மாற்று செயற்திட்டமொன்றை உருவாக்குவதற்கு இலங்கையின் கல்வி விடயங்கள் தொடர்பான ஜனாதிபதி செயலணி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களால் ஏற்கனவே ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

செயலணி முன் வைத்த கல்வித்துறையின் நீண்டகாலப் பிரச்சினைகளை பரிசீலித்த ஜனாதிபதி அவர்கள், நாட்டின் மிக முக்கிய சொத்து எதிர்கால சந்ததி என்றும் அனைத்து பிரஜைகளும் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையொன்றை வாழ்வதற்கும் சட்டத்தை மதிக்கின்ற பிரஜையாக சுபீட்சமானதும் திருப்திகரமான வாழ்க்கை ஒன்றை வாழ்வதற்கு முடியுமான வகையில் மனிதவள அபிவிருத்தியை விருத்தி செய்தல் அரசாங்கத்தின் முதன்மை பொறுப்பு என்றும் தெளிவுபடுத்தினார்.

ஜனாதிபதியின் வழிகாட்டலின் பிரகாரம் உருவாக்கப்படும் திறன் அபிவிருத்தி தசாப்த்தத்தின் செயற்திட்டம் வாழ்நாள் முழுவதும் கல்வி கற்றலை ஊக்குவிப்பதுடன், கல்வித்துறையில் ஈடுபாட்டுக்கான பல்வேறு வாய்ப்புக்களை அறிமுகப்படுத்துவதுடன், இலங்கையை திறன் அபிவிருத்தித்துறையில் முன்னேற்றுவதையும் அனைவருக்கும் அதனுடன் ஒன்றிணையும் சந்தர்ப்பத்தை வழங்குவதையும் முதன்மைபடுத்துகின்றது.

அறிமுகப்படுத்தியுள்ள வழிகாட்டல்களை மாணவர்கள், கல்வியியலாளர்கள், பெற்றோர் மற்றும் தொழில் வல்லுனர்கள் ஆகியோருடன் தேசிய ரீதியிலான நிறுவனங்களின் உண்மையான தேவையை நிறைவேற்ற முடியுமா என்பதை அறிந்துகொள்ள மாற்றீடான வேலைத்திட்டம் தொடர்பாக எதிர்வரும் காலங்களில் பொதுமக்கள் கருத்துக்களுக்கும் இடமளிப்பதாகவும் ஜனாதிபதி  குறிப்பிட்டார்.

திறன் அபிவிருத்தி தசாப்தத்திற்கு அமைவான பரிமாற்று நிகழ்ச்சி நிரலை இறுதியாக தயாரிக்கும்போது பொதுமக்களின் கருத்துக்களும் உள்வாங்கப்படும். எதிர்காலத்திற்கு உகந்ததும், தான் தெரிவு செய்யும் துறையில் உலக தலைவராக மாறுவதற்கு முடியமான வகையில் அனைத்து இலங்கை மக்களுக்கும் பெருமையை ஏற்படுத்தும் மற்றும் தேசிய அபிவிருத்திக்கு பங்காற்றக்கூடிய தலைமுறையொன்றை உருவாக்கும் ஜனாதிபதி அவர்களின் நோக்கத்தை அடைந்துகொள்ளக்கூடிய வகையில் கல்வி, கைத்தொழில் மற்றும் தொழில்துறையினரை தொடர்புப்படுத்தி செயற்திட்டத்தை நடைமுறை சாத்தியமானதாக மாற்றுவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.


Add new comment

Or log in with...