உழவு இயந்திர சக்கரத்தில் சிக்குண்டு ஒருவர் பலி | தினகரன்

உழவு இயந்திர சக்கரத்தில் சிக்குண்டு ஒருவர் பலி

மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று (14)  இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வெல்லாவெளி 40ஆம் கிராமம் வம்மியடி ஊற்றுக் கிராமத்தை  சேர்ந்த 04 பிள்ளைகளின் தந்தையான நல்லையா நாகேந்திரன்  (56) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

38ஆம் கிராமத்தில் நெல் அறுவடையில் ஈடுபட்டிருந்தபோது, உழவு இயந்திரத்தின் சாரதிக்கு அருகில் இருந்து வந்தவர் தவறி வீழ்ந்த நிலையில், உழவு இயந்திரத்தின் சக்கரத்தில் சிக்குண்டு  உயிரிழந்துள்ளதாக ,வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விபத்து தொடர்பாக சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(மணல்சேனை நிருபர்–நடனசபேசன் சாமித்தம்பி)


Add new comment

Or log in with...