இணைப்பற்ற இதயத்துடிப்புமானி (stethoscope) ஜனாதிபதியிடம் கையளிப்பு | தினகரன்


இணைப்பற்ற இதயத்துடிப்புமானி (stethoscope) ஜனாதிபதியிடம் கையளிப்பு

உயர்தர வகுப்பு மாணவனின் கண்டுபிடிப்பு 

உயர் தரத்தில் கல்விகற்கும் மாணவர் ஒருவர் உருவாக்கிய இணைப்பற்ற இதயத்துடிப்புமானி (stethoscope) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது. ஜனாதிபதி (13) கண்டி தலதா மாளிகைக்கு சென்ற சந்தர்ப்பத்தில் வெனுர விஜேசேகர என்ற உயர்தர மாணவன் தமது கண்டுபிடிப்பு தொடர்பாக ஜனாதிபதியை தெளிவுபடுத்தினார்.  

உபகரணத்தை பரீட்சித்த ஜனாதிபதி, மாணவனின் திறமையை பாராட்டினார். வெனுர விஜேசேகர கண்டி திருத்துவக் கல்லூரியில் க.பொ.த உயர்தர கணிதப் பிரிவில் கல்வி கற்று வருகிறார்.  

அவர் உருவாக்கிய இதயத்துடிப்புமானியை (stethoscope) இணைப்பின்றி பயன்படுத்த முடியும். அதன் மூலம் தனிநபர் இடைவெளியை பேணி நோயாளியை பரிசோதிப்பதற்கு வைத்தியருக்கு முடியும்.  மல்வத்து பீடத்தின் அனுநாயக்க தேரர் சங்கைக்குரிய நியங்கொட விஜித்தசிறி மற்றும் தலதா மாளிகையின் தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேல பண்டார உள்ளிட்ட பலர் இச்சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டனர். 


Add new comment

Or log in with...