மேலும் 3 கடற்படையினர் குணமடைவு | தினகரன்


மேலும் 3 கடற்படையினர் குணமடைவு

கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 03 கடற்படையினர் பூரண குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து நேற்று (13) வெளியேறியுள்ளனர்.

குறித்த கடற்படையினர் மூவரும் மினுவாங்கொடை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தனர். அவ்வைத்தியசாலையில் அவர்கள் சிகிச்சை பெற்றுவந்த வேளையில்,  அவ்வப்போது PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவுகளுக்கு அமைய, குறித்த வைரஸ் தொற்று அவர்களது உடலில் மேலும் இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று அவர்கள் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாக, கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாறு கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 898ஆக உயர்வடைந்துள்ளதாகவும், கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்ட கடற்படையினர் இவ்வாறு குணமடைந்து வைத்தியசாலைகளிருந்து வெளியேறியுள்ள போதிலும், சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய, அவர்களை மேலும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்த கடற்படையினரால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.


Add new comment

Or log in with...