தினமும் குறைந்தது 5,000 PCR பரிசோதனைகள் அவசியம் | தினகரன்


தினமும் குறைந்தது 5,000 PCR பரிசோதனைகள் அவசியம்

தவறினால் இரண்டாவது அலையை தடுக்க முடியாது

நாட்டில் பி.சி.ஆர். சோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு அரச  மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் சுகாதாரத் துறையினரிடம் மீண்டும் கோரிக்கை  விடுத்துள்ளனர்.  

தனிமைப்படுத்தல் நிலையமாக தற்போது பயன்படுத்தப்பட்டு வரும்  கந்தக்காடு போதைப்பொருள் புனர்வாழ்வு நிலையத்தில் கொரோனா  தொற்றாளர்களின் எண்ணிக்கையானது தொடர்ச்சியாக அதிகரித்து செல்கின்றமையினை  மேற்கோள்காட்டியே இந்த கோரிக்கை விடப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் நிபுணர்கள் நாளாந்தம்  2,500 பி.சி.ஆர். சோதனைகளை பரிந்துரைத்தபோதிலும், கடந்த இரண்டு மாதங்களாக  நாளொன்றுக்கு 500-/ 600 பி.சி.ஆர். சோதனைகள் மாத்திரம்  முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர்  வைத்தியர் ஷெனால் பெர்னாண்டோ சுட்டிக்காட்டினார்.  


Add new comment

Or log in with...