தெலுங்கானா ஆளுநர் தமிழிசைக்கு கொரோனா இல்லை

தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு கொரோனா இல்லை என்று பரிசோதனைக்கு பின் தெரியவந்துள்ளது.

தெலுங்கானா ஆளுநர் மாளிகையில் 10 ஊழியர்களுக்கும், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் 10 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று நேற்றுமுன்தினம் உறுதியாகி உள்ளது. அவர்கள் அனைவரும் ஹைதராபாத் எஸ்.ஆர்.நகரில் உள்ள அரசு ஆயுர்வேத ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.இதையடுத்து, ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவருக்கு தொற்று இல்லை என தெரியவந்துள்ளது.

தமிழிசை டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், நான் கொரோனா பரிசோதனை செய்து கொண்டேன். தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது. சிவப்பு மண்டலத்தில் உள்ள மக்களும், பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் விரைவாக கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். சீக்கிரமாக பரிசோதிப்பது நம்மை மட்டுமல்ல, மற்றவர்களையும் காக்கும். தயக்கம் வேண்டாம். நீங்கள் பரிசோதனை செய்து கொண்டு மற்றவர்களையும் ஊக்குவியுங்கள் இவ்வாறு டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.


Add new comment

Or log in with...