ஆயிரம் ரூபா சம்பள விவகாரத்தில் அரசியல் பிழைப்பு நடத்தும் முயற்சி | தினகரன்

ஆயிரம் ரூபா சம்பள விவகாரத்தில் அரசியல் பிழைப்பு நடத்தும் முயற்சி

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பள விவகாரம் மீண்டும் இப்போது பேசுபொருளாக அரங்கத்துக்கு வந்திருக்கிறது. இது தேர்தல் பரபரப்புக் காலம் என்பதால் மலையக அரசியலில் ஆயிரம் ரூபா விவகாரமும் தானாகவே இடம்பிடித்துக் கொண்டு விட்டது எனலாம்.

தோட்டத் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபா சம்பளக் கோரிக்கை தொடர்பில் முதலில் யதார்த்தங்கள் சிலவற்றைச் சொல்ல வேண்டியிருக்கிறது. மலையகத்தில் இக்கோரிக்கை தீவிரமடையத் தொடங்கி பல வருட காலமாகி விட்டது. ஆயிரம் ரூபா சம்பளத்தை வென்றெடுப்பதற்காக மலையகத்தில் மாத்திரமன்றி கொழும்பு உட்பட நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் முன்னைய ஆட்சிக் காலத்தில் நடத்தப்பட்டிருந்தன. பெருந்தோட்டங்களில் பணிப் பகிஷ்கரிப்புப் போராட்டங்களும் பரவலாக அந்நாளில் இடம்பெற்றன.

ஆயிரம் ரூபா சம்பளத்தை எவ்வாறாயினும் வென்றெடுக்க முடியும் என்றுதான் தோட்டத் தொழிலாளர்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர். ஆனால் இறுதியில் ஏமாற்றமே கிடைத்தது. பெருந்தோட்டக் கம்பனிகளுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் இடையே கைச்சாத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தால் தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற முடியவில்லை. சொற்ப சம்பள உயர்வுடன் கூட்டு ஒப்பந்தம் நிறைவேறியது. தோட்டத் தொழிலாளர் நலனில் முன்னைய அரசாங்கம் கொண்டிருந்த அக்கறையீனமே இதற்கான முதன்மையான காரணம் ஆகும்.

அதேசமயம் முன்னைய அரசாங்கத்துடன் தோழமை கொண்டிருந்த, மலையகத் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பங்காளிக் கட்சிகளும் இதற்குப் பொறுப்புக் கூற வேண்டியுள்ளது. அக்கட்சிகள் பொருத்தமான வேளையில் அரசுக்கு அழுத்தம் பிரயோகித்திருப்பின் ஆயிரம் ரூபா சம்பளக் கோரிக்கையை இலகுவாக வென்றெடுத்திருக்க முடியும்.

இதுஒருபுறமிருக்கையில், ஒவ்வொரு குடும்பத்தினதும் இன்றைய வாழ்க்கைச் செலவை வைத்துப் பார்க்கின்ற போது ஆயிரம் ரூபா என்பது அன்றாட சீவனோபாயத்துக்குப் போதுமானதுதானா என்பதை ஒவ்வொருவரும் சிந்தித்துப் பார்ப்பது அவசியம். தோட்டத் தொழிலாளர் குடும்பங்களின் அன்றாட தேவை உணவு மட்டும்தான் என்ற எண்ணத்துடன் சிந்திப்பது தவறு. உணவுக்கு அப்பால் ஒரு குடும்பம் கொண்டுள்ள ஏனைய தேவைகளையெல்லாம் பார்க்கின்ற போது, ஆயிரம் ரூபா என்பது சொற்ப தொகையே ஆகும். எனவே ஆயிரம் ரூபாவுக்கும் மேலான சம்பளமே இன்றைய தேவையாகும்.

ஆனாலும் ஆயிரம் ரூபாவுக்கு அப்பால் கோரிக்கை முன்வைக்கக் கூடிய சூழல் இப்போது உள்ளதாகத் தெரியவில்லை. ஆகவே ஆயிரம் ரூபாவையாவது எவ்வாறாயினும் வென்றெடுப்பதே இன்றைய நிலையில் உகந்ததாகத் தெரிகின்றது.

தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளத்தைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மறைந்த தலைவரான ஆறுமுகன் தொண்டமான் உண்மையிலேயே உறுதிப்பாடு கொண்டிருந்தார். ஆனால் கடந்த ஆட்சிக் காலத்தில் இ.தொ.கா எதிரணி தரப்பில் இருந்ததன் காரணத்தினால் அமரர் ஆறுமுகன் தொண்டமானால் இதற்கான அழுத்தத்தைப் பிரயோகிக்க முடியாமல் போனது.

எனினும் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் இன்றைய அரசில் இ.தொ.கா பங்காளிக் கட்சியாக வந்ததன் பின்னர் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாவைப் பெற்றுக் கொடுப்பதில் அமரர் ஆறுமுகன் பெரும் முயற்சிகளை மேற்கொண்டார். அவர் மரணம் அடைவதற்கு சில மணி நேரத்துக்கு முன்னரும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து ஆயிரம் ரூபா சம்பளக் கோரிக்கை தொடர்பாக பேச்சு நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேசமயம், மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளத்தைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளார் என்பதையும் இவ்விடத்தில் குறிப்பிட வேண்டியுள்ளது. அமரர் ஆறுமுகனின் கனவை நனவாக்க பாடுபடப் போவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான நிலையில் இ.தொ.காவின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கும், அமரர் ஆறுமுகனின் புதல்வரான ஜீவன் தொண்டமானும் ஆயிரம் ரூபா சம்பளத்தை தோட்டத் தொழிலாளர்களுக்குப் பெற்றுக் கொடுப்பதில் உறுதியான நிலைப்பாட்டில் உள்ளார்.

இவ்வாறானசூழ்நிலையில்ஆயிரம்ரூபாசம்பளத்தைதுரும்பாகவைத்துக்கொண்டுமலையகத்தில்சிலஅரசியல்கட்சிகள்மக்களிடம்வாக்குகளைவேட்டையாடமுற்படுவதுதெரிகின்றது. ஆயிரம்ரூபாவைவென்றெடுப்பதற்கானஉகந்தசூழல்இப்போதுகனிந்திருக்கின்றது.

இந்நிலையில்அந்தவிவகாரத்தில்அரசியல்பிழைப்புநடத்தஎதிரணிகட்சிகள்முற்படுவதுமுறையல்ல.  


Add new comment

Or log in with...