வேட்பாளர்கள் பொருளாதார நிலைப்பாட்டினை தமது பிரசாரங்களில் குறிப்பிடவில்லை | தினகரன்


வேட்பாளர்கள் பொருளாதார நிலைப்பாட்டினை தமது பிரசாரங்களில் குறிப்பிடவில்லை

முன்னாள் அமைச்சர் மிலிந்த மொறகொட

இலங்கையில் 2020 பாராளுமன்றத் தேர்தலுக்கான பிரசாரங்களில் போட்டியிடும் வேட்பாளர்களோ அரசியல் கட்சிகளோ இதுவரை உருப்படியான பொருளாதார நிலைப்பாடுகள் பற்றி குறிப்பிடவில்லை என்று பேத்பைன்டர் மன்றத்தின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான மிலிந்த மொறகொட விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டுள்ள வேட்பாளர்கள் இதுவரை சாத்தியமற்ற மற்றும் நம்பமுடியாத பொருளாதார விடயங்களைப் பற்றிக் கூறி வருகின்றனர். இவை எந்த வகையிலான பொருளாதார அறிவையும் தரக் கூடியவை அல்ல. அதற்கு மாறாக நாட்டின் பொருளாதாரத்துக்கு பாரதூரமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை. இவ்வாறான பாதிப்பு எம்மை பெருமளவில் பின்னோக்கி கொண்டு செல்லக்கூடியவை.

மட்டுப்படுத்தப்பட்ட உள்ளக சந்தையைக் கொண்டுள்ள எமது சிறிய பொருளாதாரம் உலக ரீதியில் எம்மை தனிமைப்படுத்தக்குடிய ஆபத்தையும் இது கொண்டுள்ளது. அவ்வாறன நிலை ஏற்பட்டால் அதனை நாம் தாங்க்கிக்கொள்ள முடியாது என்றும் மிலிந்த மொறகொட மேலும் கூறியுள்ளார். கொவிட்-19 நோய்த்தொற்று காரணமாக உலக நாடுகள் சொல்ல முடியாத துயரங்களுக்கு ஆளாகி வரும் நிலையில் எமது நாட்டை கோவிட் 19 நோய்த்தாக்கத்தில் இருந்து பாதுகாத்திருப்பதை எவரும் மறுக்க முடியாது. இந்நிலையில் கோவிட் 19 நோய்த்தொற்றால் ஏற்படக்கூடிய பொருளாதார மற்றும் சமூக விளைவுதான் தேர்தலில் பொட்டியிடும் வேட்பாளர்களுக்கு மறந்துவிட்டதைப் போல் தெரிகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 


Add new comment

Or log in with...