நீரில் மூழ்கி 14 வயதுச் சிறுவன் பலி | தினகரன்


நீரில் மூழ்கி 14 வயதுச் சிறுவன் பலி

மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஊத்துச்சேனை பிரதேசத்தில் குளத்தில் குளிக்கச் சென்ற சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக, வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர். 

கருணைபுரம், வாழைச்சேனையைச் சேர்ந்த சி.ஜக்ஷன்(14) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.

நேற்று (12) காலை குறித்த சிறுவன் வழமை போன்று தமது கிராமத்தில் உள்ள ஊத்துச்சேனை அரக்கல் குளத்தில் குளித்துக்கொண்டிருந்தபோது ஆழமான சேற்றுப் பிரதேசத்தில் கால் புதைந்து உயிரிழந்துள்ளதாக, உறவினர்கள் தெரிவித்தனர்.

குறித்த சிறுவன் தனது பாட்டியுடன் வசித்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பாக பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

(பாசிக்குடா நிருபர் – உருத்திரன் அநுருத்தன், எச்.எம்.எம்.பர்ஸான்) 


Add new comment

Or log in with...