தோட்ட பாடசாலைகள், சுகாதார அபிவிருத்திக்கு அரசு முன்னுரிமை | தினகரன்


தோட்ட பாடசாலைகள், சுகாதார அபிவிருத்திக்கு அரசு முன்னுரிமை

கண்டி, நாவலப்பிட்டி விஜயத்தில் ஜனாதிபதி உரை

தோட்ட பாடசாலைகளுக்கும் சுகாதார தேவைகளுக்கும் முன்னுரிமையளிப்பதாகவும் அத்தோடு அம் மக்கள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகளுக்கு திருப்தியான தீர்வுகளை வழங்குவதாக  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ உறுதியளித்தார்.

ஹேவாஹெட்டை, கலஹா நகரில் அருள்சாமியினால்  நேற்று முன்தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.  இங்கு ஜனாதிபதி மேலும் கூறுகையில்,

பாரம்பரிய கைத்தொழில்களை பாதுகாத்து அவற்றை முன்னேற்ற வேண்டும்.

அத்தகைய கைத்தொழில்கள் உள்ளிட்ட நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிப்பை வழங்கும் அனைத்து சுயதொழிலாளர்களுக்கும் பிரதேச மட்டத்தில் தேவையான வசதிகளை வழங்குகிறேன் .

ஆனந்த அழுத்தகமகேயினால் இச்சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கு தனக்கு பலமான பாராளுமன்ற அதிகாரத்தை வழங்குமாறு ஜனாதிபதி ஹேவாஹெட்ட, தலாத்துஓய பஸ் நிலையத்திற்கருகில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின்போது தெரிவித்தார். தொகுதிக்கு அமைப்பாளர் ஒருவர் இல்லாத காரணத்தினால் தற்போதைய தேர்தல் முறைமையை மாற்றுமாறு கோரிக்கை ஒன்றை முன்வைத்து பிரதேசவாசிகள் தெரிவித்த பிரச்சினைக்கு பதிலளித்த ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். மரக்கறிகளை நீண்டகாலத்திற்கு பாதுகாப்பதற்கு குளிரூட்டி நிலையம் ஒன்றை தலாத்து ஓய பிரதேசத்தில் நிர்மாணிக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்தனர்.


Add new comment

Or log in with...