தபால் மூல வாக்களிப்பு இன்று முதல் 5 தினங்கள் | தினகரன்


தபால் மூல வாக்களிப்பு இன்று முதல் 5 தினங்கள்

சுகாதார விதிமுறைகளை பின்பற்ற அறிவுரை

பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புகள் இன்று ஆரம்பமாகி தொடர்ந்து ஐந்து நாட்கள் இடம்பெறவுள்ளது. இம்முறை தபால்மூல வாக்களிப்புக்காக ஏழு நாட்களை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு ஒதுக்கியுள்ளது. அதன் பிரகாரம் இன்று, நாளை மற்றும் 15, 16, 17ஆம் திகதிகளிலும் எதிர்வரும் 20, 21ஆம் திகதிகளிலும் தபால் மூல வாக்களிப்புகள் இடம்பெறவுள்ளன.

தபால்மூல வாக்களிப்புக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு, தபால்மூல வாக்களிப்பு நிலையங்களில் இருக்கும் சுகாதார சேவைகள் அதிகாரிகளின் ஆலோசனைகளின் பிரகாரம் அனைவரும் தமது வாக்குகளை அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது.  

பொலிஸ் உத்தியோகத்தர்கள், பாதுகாப்பு படையினர், சிவில் பாதுகாப்பு திணைக்களம், சுகாதார பிரிவினர் மற்றும் சகல மாவட்டங்களிலும் உள்ள தேர்தல் அலுவலக அதிகாரிகள் தவிர்ந்த ஏனைய அனைத்து அரச நிறுவனங்களிலும் சேவையாற்றும் சேவையாளர்கள் எதிர்வரும் 14, 15 ஆம் திகதிகளில் வாக்களிக்க முடியும்.  

பொலிஸ் உத்தியோகத்தர்கள், பாதுகாப்பு படையினர், சிவில் பாதுகாப்பு திணைக்களம், சுகாதார பிரிவினர் மற்றும் சகல மாவட்டங்களிலும் உள்ள தேர்தல் அலுவலக அதிகாரிகள் எதிர்வரும் 16, 17ஆம் திகதிகளில் வாக்களிக்க முடியும்.  

இந்த தினங்களில் வாக்களிக்க முடியாதவர்கள் எதிர்வரும் 20 மற்றும் 21ஆம் திகதிகளில் வாக்களிக்க முடியுமெனவும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 

சுப்பிரமணியம் நிஷாந்தன்  


Add new comment

Or log in with...