SLPP பிரசார கூட்டங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

கட்சி செயலாளர் சாகர காரியவசம் அறிவிப்பு

பொதுஜன பெரமுன கட்சியின் பிரதான தேர்தல் பிரசார கூட்டங்கள் அனைத்தும் தற்காலிகமாக இரத்துச் செய்யப்பட்டுள்ளன.  

 13ம், 14ம் மற்றும் 15 ம் ஆகிய தினங்களில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச கலந்து கொள்ளவிருந்த அனைத்து தேர்தல் பிரசார கூட்டங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக கட்சியின் தேசிய அமைப்பாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.  

இம்முறை தேர்தலில் பொதுஜன பெரமுன சார்ப்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஏற்பாடு செய்துள்ள பிரசார கூட்டங்களை மட்டுப்படுத்துமாறும் அவ்வாறு பிரசார கூட்டங்கள் முன்னெடுக்கப்பட்டால் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

சமூகத்தில் இருந்து மீண்டும் கொரோனா  பரவ ஆரம்பித்துள்ள நிலையில் அதனை கட்டுப்படுத்த ஒத்துழைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

ஆகஸ்ட் 5 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பிரசாரங்கள் சூடு பிடித்துள்ளன.

இந்த நிலையிலே கொரோனா தொற்று அபாயம் மீண்டும் தலைதூக்கியுள்ளன.(பா)


Add new comment

Or log in with...