தமிழ், முஸ்லிம் மக்களிடையே பிளவை ஏற்படுத்த கருணா முயற்சி | தினகரன்


தமிழ், முஸ்லிம் மக்களிடையே பிளவை ஏற்படுத்த கருணா முயற்சி

எச்.எம்.எம். ஹரீஸ் குற்றச்சாட்டு

தேர்தல் பிரசாரம் என்ற போர்வையில் கருணா அம்மான் தமிழ்,முஸ்லிம் மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்தும் வண்ணம் செயற்பட்டு வருகின்றார். அவரது பிரசாரத்தில் அண்மையில் முஸ்லிம்களை வந்தேறுகுடிகள்  என விழித்து கருத்துக்களை தெரிவித்திருந்தார்.ஆனால் கருணாதான் அம்பாறை மாவட்டத்தின் அரசியல் வந்தேறிகுடியாவார். 46 வீதம் வாழும் முஸ்லிம் மக்களின்  அடையாளம் எமது அம்பாறை மாவட்டமாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் வேட்பாளருமான எச்.எம்.எம். ஹரீஸ் குற்றஞ்சாட்டினார்.  அம்பாறை திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும் இவர் விசேட செய்தியாளர் மாநாடு ஒன்றில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் அவர் தனது கருத்தில் தெரிவித்ததாவது பல இடங்களில் முஸ்லிம்களை இவர் தலைமையிலான புலிகளே கடந்த காலங்களில் கொன்றிருந்தார்கள். காத்தான்குடி, கல்முனை, அக்கரைப்பற்று, பொத்துவில், மூதூர் போன்ற பகுதிகளில் முஸ்லிம் மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். 

கருணா அம்மானின் தேர்தல் வியூகம் என்பது கல்முனை தொகுதியில் என்னை தோற்கடி த்து கல்முனை நகரத்தை கைப்பற்றலாம் என பகல் கனவு காண்கின்றார். கருணா என்பவர் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்.கடந்த காலங்களில் சஹ்ரானின் தாக்குதலை பயன்படுத்தி கல்முனை தரமுயர்த்தல் தொடர்பிலான உண்ணாவிரதம் இருந்த காலத்தில் அதனை தோற்கடிக்க முயற்சி செய்தனர். ஆனால் மக்களின் ஆதரவுடன் அதை முறியடித்து வெற்றி கண்டோம். 

மருதமுனை தினகரன் நிருபர் 


Add new comment

Or log in with...