நடிகை ஐஸ்வர்யா ராய்க்கும், அவரது மகளுக்கும் கொரோனா | தினகரன்

நடிகை ஐஸ்வர்யா ராய்க்கும், அவரது மகளுக்கும் கொரோனா

பிரபல பொலிவூட் நடிகர் அபிஷேக் பச்சனை தொடர்ந்து, அவரது மனைவியும் பொலிவூட் நடிகையுமான ஐஸ்வர்யா ராய்க்கும் அவர்களது மகள் ஆரத்யா பச்சனுக்கும் தற்போது கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

பிரபல பொலிவூட் நடிகர்களான அமிதாப் பச்சனுக்கும் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா தொற்று இருப்பது நேற்று (11) உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அவர்கள் இருவரும் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.

அவர்கள் கொரோனா தொற்றிலிருந்து விரைவில் குணமடைய வேண்டும் என்று  திரைப்பிரபலங்கள் பலரும் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

அவரது குடும்பத்தினருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டது.

இந்நிலையில், அபிஷேக் பச்சனின்மனைவி  ஐஸ்வர்யா ராய் மற்றும் அவர்களது மகள் ஆரத்யாவுக்கும் கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி அவர்கள் இருவருக்கும் கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளதாகவும், இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சனுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

 


Add new comment

Or log in with...