அமெரிக்காவில் 3ஆவது நாளாகவும் 55,000க்கும் மேற்பட்டோருக்கு தொற்று | தினகரன்


அமெரிக்காவில் 3ஆவது நாளாகவும் 55,000க்கும் மேற்பட்டோருக்கு தொற்று

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 56,000க்கும் அதிகமானோருக்கு கொவிட்-19 நோய்த் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து மூன்றாவது நாளாக அங்கு அந்த எண்ணிக்கை 55,000க்கும் அதிகமாகப் பதிவானது. புளோரிடா, டெக்சாஸ், கலிபோர்னியா ஆகிய மாநிலங்கள் நோய்ப்பரவலால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

அலபாமா, மொண்டானா, விஸ்கோன்சின் ஆகிய மாநிலங்களிலும் கடந்த வியாழக்கிழமை அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நோய்த்தொற்றுச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த முடியாமல் அமெரிக்கா தடுமாறி வருகிறது.

அமெரிக்காவில் 3.1 மில்லியனுக்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 133,000 பேர் உயிரிழந்துள்ளனர்.


Add new comment

Or log in with...