பொலிவிய ஜனாதிபதிக்கு கொரோனா தொற்று உறுதி

தென் அமெரிக்க நாடான பொலிவியாவின் இடைக்கால ஜனாதிபதியாக உள்ள ஜீனைன் அனெசுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதாகவும், மருத்துவர்கள் அறிவுரைப்படி வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் உள்ளிட்ட நான்கு அமைச்சர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், அங்கு நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42 ஆயிரத்தை கடந்துள்ளது.

பொலிவியாவில் இரண்டு மாதங்களுக்கு குறைவான காலத்தில் பொதுத் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டிருக்கும் நிலையிலேயே அங்கு வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்தத் தேர்தலை ஆரம்பத்தில் அனெஸ் எதிர்த்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. லத்தீன் அமெரிக்க நாடுகளை மோசமாகத் தாக்கி இருக்கும் இந்த கொரோனா வைரஸ் தொற்றுக்கு பிரேசில் ஜனாதிபதி ஜெயிர் பொல்சொனாரோ உள்ளாகி இருக்கும் நிலையிலேயே இந்த செய்தி வெளியாகியுள்ளது.

 


Add new comment

Or log in with...