பலாலியில் தனிமைப்படுத்தலை பூர்த்தி செய்த 100 பேர் வெளியேற்றம் | தினகரன்


பலாலியில் தனிமைப்படுத்தலை பூர்த்தி செய்த 100 பேர் வெளியேற்றம்

கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக யாழ்ப்பாணம், பலாலி விமானப்படைத் தளத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 100 பேர் குணமடைந்து இன்றையதினம் (11)  அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஜூன் மாதம் 26ஆம் திகதி தங்க வைக்கப்பட்டிருந்த குறித்த100 பேரும்14 நாட்கள் நிறைவடைந்து இன்றையதினம் சுய தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டு சொந்த இடங்களுக்கு விமானப் படையின் வாகனம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இவர்கள் கொழும்பு, கண்டி, அநுராதபுரம் உள்ளிட்ட கொழும்பில் சில மாவட்டங்களை சேர்ந்தவர்கள். இவ்வாறு  இவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டதன் பின்னர் இன்றையதினம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

 


Add new comment

Or log in with...