பொலிவிய ஜனாதிபதிக்கு கொரோனா தொற்று | தினகரன்


பொலிவிய ஜனாதிபதிக்கு கொரோனா தொற்று

பொலிவிய ஜனாதிபதி ஜெனின் அனெஸ் (Jeanine Anez) கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக, சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பொலிவியாவிலும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகின்றது.

இன்று (10) காலை நிலவரப்படி பொலிவியாவில் 42,984 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொலிவியா ஜனாதிபதி ஜெனின் அனெஸிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தனக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டிருப்பதாக ட்வீட்டரில் பதிவிட்டுள்ள ஜெனின் அனெஸ்,  நலமுடன் இருப்பதாகவும், தனது பணிகளை தனிமைப்படுத்திக் கொண்டபடியே தொடர இருப்பதாகவும்  தெரிவித்துள்ளார்.

பொலிவியாவில் சுகாதாரத்துறை மந்திரி உட்பட 07 மந்திரிகள் ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதாகவும், சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 


Add new comment

Or log in with...