டிரான் அளஸ் உள்ளிட்ட 4 பேரும் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுதலை | தினகரன்


டிரான் அளஸ் உள்ளிட்ட 4 பேரும் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுதலை

ராடா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் டிரான் அளஸ் உட்பட 04 பேரை, அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிப்பதாக, கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வடக்கு, கிழக்கில் வீட்டுத் திட்டமொன்றில் நிதி மோசடி இடம்பெற்றதாக கூறி ராடா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் டிரான் அளஸ் உட்பட 04 பேருக்கு எதிராக வழக்கு விசாரணை இடம்பெற்று வந்தது.

இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று (10) நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்டது. இதன்போதே ராடா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் டிரான் அளஸ் உட்பட 04 பேரையும் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்து நீதிமன்றம் விடுவித்துள்ளது.

சுனாமி ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வீடுகளை புனரமைப்புச் செய்வதற்காக ராடா நிறுவனத்திற்கு, பொது கருவூலகத்திலிருந்து வழங்கப்பட்ட 200 மில்லியன் ரூபா நிதியை மோசடி செய்ததாக இவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டு வழக்கு தொடரப்பட்டிருந்தது.     

 


Add new comment

Or log in with...