கம்போடிய சுற்றுலா நகரில் நாய் இறைச்சிக்குத் தடை

கம்போடியாவின் பிரபல சுற்றுலா நகரான சியெம் ரீப்பில் நாய் இறைச்சி வர்த்தகத்திற்கு தடை விதிக்கப்பட்டது குறித்து விலங்கு உரிமை ஆர்வலர்கள் மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளனர்.  

கம்போடியா உட்பட ஆசிய நாடுகள் சிலதில் நாய் இறைச்சி உண்பது வழக்கம் என்பதோடு அண்டை நாடான கம்போடியாவில் அது அதிக பிரபலமாகும். எனினும் அங்கோர் வெட் கோவில் உள்ள சியெம் ரீப் பகுதி நாய் இறைச்சி வர்த்தகத்தின் மையப்பகுதியாக உள்ளது என்று குறிப்பிடும் விலங்குரிமை ஆர்வலர்கள் அங்கு ஆண்டுதோறும் மூன்று மில்லியனுக்கும் அதிகமான நாய்கள் இறைச்சிக்காக அறுக்கப்படுவதாக குறிப்பிடுகின்றனர்.  

இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை நாய் இறைச்சி வர்த்தகத்திற்கு சியெம் ரீப் நிர்வாகம் தடை விதித்ததோடு, அண்மைய ஆண்டுகளில் இந்த வர்த்தகம் அராஜக நிலையை எட்டியிருப்பதாக மாகாண விவசாயத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.  

உணவுக்காக நாய்களை அறுத்தால் அதிகபட்சம் ஐந்து ஆண்டு சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.     


Add new comment

Or log in with...