தொழில் தருவதாக ஒரு கோடி ரூபா மோசடி; இந்தியர் கைது

தொழில் தருவதாக ஒரு கோடி ரூபா மோசடி; இந்தியர் கைது-Canada Job Money Fraud-Indian Arrested at Bambalapitiya

கனடாவில் வேலைவாய்ப்புகளை பெற்றுத் தருவாக கூறி ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் இந்திய பிரஜை ஒருவர், கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர், நேற்று (08) பிற்பகல் 1.30 மணியளவில், பம்பலப்பிட்டி சந்தியில் வைத்து, கொழும்பு மோசடி விசாரணை பணியக அதிகாரிகளாால் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கனடாவில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி பல்வேறு நபர்களிடமிருந்து பணம் பெற்றமை தொடர்பில் பெறப்பட்ட முறைப்பாடுகளுக்கமைய, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், குறித்த நபரை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய சந்தேகநபர், ஒரு கோடி 4 இலட்சத்து 22 ஆயிரத்து 535 (ரூ. 10,422,535) ரூபாவை மோசடியாக பெற்றுள்ளமை தெரிய வந்துள்ளது.

32 வயதான குறித்த சந்தேகநபரை இன்று (09) புறக்கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

கொழும்பு மோசடி விசாரணை பணியகத்தினால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


Add new comment

Or log in with...