வேட்பாளர்களின் வாகனத்தை தவிர ஏனைய வாகனங்களில் தடை | தினகரன்


வேட்பாளர்களின் வாகனத்தை தவிர ஏனைய வாகனங்களில் தடை

வேட்பாளர்களின் வாகனத்தை தவிர ஏனைய வாகனங்களில் தடை-Stickers-Flags-Photogrph On Vehicles Prohibited-Election Commission

ஸ்டிக்கர்கள் உள்ளிட்ட அனைத்தையும் அகற்றுமாறு உத்தரவு

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், கட்சிகள்  மற்றும் குழுக்களை ஊக்குவிப்பது தொடர்பாக வாகனங்களில் ஒட்டப்பட்டுள்ள, ஸ்டிக்கர்கள், புகைப்படங்கள் உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் அகற்றுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.

ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவினால் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தலிலேயெ இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வேட்பாளரின் பிரத்தியேக வாகனம் தவிர்ந்த, பஸ்கள், முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட வேறு வாகனங்களில் இவ்வாறான விடயங்களை காட்சிப்படுத்துவது, தேர்தல் சட்ட விதிகளுக்கமைய குற்றமாகும் என்பதோடு, அவற்றை அகற்றுவதற்கு பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

PDF File: 

Add new comment

Or log in with...